யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(122) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×20.5 சமீ.
கலாமன்ற உறுப்பினர்களதும் பிற பிரமுகர்களினதும் வாழ்த்துச் செய்திகளுடனும் நீ.மரியசேவியர் அடிகளாரின் வாழ்வும் வரலாற்றுக் கட்டுரையுடனும் வெளிவந்துள்ள இம்மலரில், அனுமானங்கள் வெல்லப்பட முடியுமா? (R.A.திலகரட்டினம்), திருப்பாடுகளின் காட்சி (Passion Play) சடங்கில் இருந்து நாடகம் வரை (யோ.யோன்சன் ராஜ்குமார்), புதிய சாறம் -சிறுகதை (நீ.மரியசேவியர் அடிகள்), அவன் ஒரு பம்பரம்-கவிதை (எம்.சாம்.பிரதீபன்), நனவாகும் கனவுகளா? (ஆனையூரான்), மரியசேவியர் அடிகளார் பற்றி (தாவீது அடிகள்), உரிமைக்குத் தமிழ் உறவுக்கு அயல்மொழி – உலகிற்கு ஆங்கிலம், பிள்ளைகளது உரிமைகளும் ஆசிரியர்களது பொறுப்புக்களும், உறவு பற்றி (ஜே.கிருஷ்ணமூர்த்தி), Post Modernism சில அறிமுகக்குறிப்புகள் (நீ.மரியசேவியர் அடிகள்), The Origins and Growth of Journalism in theTamil Language in Sri Lanka (Bertram Bastiampillai), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (கே.எஸ்.நடராஜா), ஈழத்து அண்மைக்கால மரபுவழிப் பிரபந்தங்கள் ஒரு சமுதாயப் பார்வை (செல்வி மாதவி சுந்தரம்பிள்ளை), யாழ்ப்பாணத்து ஓவியப்போக்கு (திரிலோஜினி சிவசுப்பிரமணியம்),Kalaimugam Extracts (நீ.மரியசேவியர்), கலைத்தூது ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18527).