15927 மனிதம்.

நினைவு மலர்க் குழு. யாழ்ப்பாணம்: அமரர் திரு. செல்லையா கந்தசாமி அவர்களின் நினைவு மலர், காளி கோவிலடி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(12), 60 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5x 13 சமீ.

சிற்பக் கலைஞர் அமரர் செல்லையா கந்தசாமி அவர்களது நினைவாக வெளிவந்துள்ள அவரது ஆளுமை வெளிப்பாட்டுத் தொகுப்பு இதுவாகும். சிற்பாசாரி கந்தசாமியின் அர்த்தமுள்ள வாழ்வில் அவர் கொண்ட இலட்சியம், மனிதநேயம், சமூகத்தின் பால் அவர் கொண்ட ஈடுபாடு போன்றவற்றை இந்நூலில் வெளிவரும் கட்டுரைகள் விளக்குகின்றன. தேர் செய்யும் தெய்வீகக் கலையில் சாதனை புரிந்த சிற்பாசாரியார் இவர். நயினாதீவு நாகபூஷணி அம்மன் திருமஞ்சம் உள்ளிட்ட  இணுவில், நீர்வேலி, தீவகம் உள்ளிட்ட குடாநாட்டின் பல பகுதிகளிலும் எழுந்தருளியுள்ள கோவில்களின் தேர்களின் இருப்பு இவரது புகழை உலகெங்கும் பரப்புகின்றன. வாகனங்களில் பாயும் குதிரை, வீறுகொண்ட சிங்கம், யாழி, எருது போன்றவற்றை உருவாக்கும்போது, அவற்றின் அங்க அளவுகள், அவற்றின் அளவுப் பிரமாணங்களுக்கு ஏற்ப வடிவமைத்த முறையை அவானிக்கும்போது அவரது திறமை திகைக்க வைக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19670).

மேலும் பார்க்க:
மு.கனகசபையின் ஓவியங்களின் தொகுப்புக் காட்சி. 15377
விம்பம்: ஓவிய நூல்.15381

ஏனைய பதிவுகள்

Book Of Ra Fixed

Content Nachfolgende Zusätzlichen Details Des Automatenspiels Man Vermag Auch Nach Mobilgeräten Aufführen Book Of Ra Slot Inoffizieller mitarbeiter Casino Verbunden Zum besten geben Nachfolgende Schlussbetrachtung