15930 தாசீசியஸ்: ஒற்றை நட்சத்திரம்.

விம்பம் அமைப்பு. லண்டன் E6 2BH : விம்பம், 4 Burges Road,1வது பதிப்பு, ஜுன் 2007. (லண்டன், அச்சக விபரம் தரப்படவில்லை).

28 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 15×22 சமீ.

கனேடிய இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் தென்னாசிய மையமும் இணைந்து, 2006ஆம் ஆண்டுக்கான ‘இயல் விருதினை’ ஈழத்தின் நவீன நாடகத்தின் பிதாமகராகக் கருதப்படும் நாடகப் பேராசான் தாசீசியஸ{க்கு  2007 ஜுன் மாதம் 3ஆம் திகதி ரொரன்ரோ பல்கலைக்கழக மண்டபத்தில் வைத்து வழங்கிக் கௌரவிப்பதையிட்டு அதனை நினைவுகூரும் வகையில் லண்டன் விம்பம் அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலர். இதில் நாடக அரங்கு: அங்கும் இங்கும், நாடகப் பேராசான் ஏ.சீ.தாசீசியஸ் (அ.வ.டேமியன் சூரி), தாசீசியஸ்: ஒற்றை நட்சத்திரம் (மு.நித்தியானந்தன்), கிராமத்துப் பையன் உலகப் பொது மகனானார் (சி.மௌனகுரு), தாசீசியஸ்: வெட்டுமுகம் (ஞானம் லெம்பட்), தாசீசியஸ்: ஒரு ஜலசந்தி (பால சுகுமார்), பிரமிக்க வைத்த தாசீசியஸ் (சுமதி ரூபன்), புதைக்கப்பட்டவன் நான் (நேர்காணல்- மு.புஷ்பராஜன்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71666).

மேலும் பார்க்க: கூத்த யாத்திரை 15394

ஏனைய பதிவுகள்