கனகசபாபதி நாகேஸ்வரன். பெலிகுல்லோயா: கனகசபாபதி நாகேஸ்வரன், மொழித்துறை, சப்ரகமுவ பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
ix, (3), 395 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-43030-0-3.
‘பழையதும் புதியதும்’ என்ற முதலாம் பிரிவில் அறிவொளி மாவை த.சண்முகசுந்தரம் சிந்தனைகளும் எழுத்துப் பணிகளும், மாவை திரு. தம்பு சண்முகசுந்தரம் வாழ்வும் பணியும், த.சண்முகசுந்தரத்தின் கலை இலக்கியப்பணி: ஓர் அறிமுக ஆய்வு, எனது வழிகாட்டி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பிரிவான ‘பின்னிணைப்பில்’ த.சண்முகசுந்தரம் எழுதிய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ‘கலையும் மரபும்’, ‘மாவை முருகன் காவடிப் பாட்டு’, ‘பூதத்தம்பி’, ‘யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரி’, ‘காகப் பிள்ளையார் மான்மியம்” ஆகிய ஐந்து படைப்பாக்கங்களுடன் த.சண்முகசுந்தரம் அவர்கள் எழுதிய கட்டுரைகளாக ஈழத்திற் சைவக் கிராமிய வழிபாடு, புலமைக் குரல்கள், ஆய்வாளர் நுஃமானின் விளக்கத்திற்கு ஒரு குறிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.