சி.செல்லத்துரை (தொகுப்பாசிரியர்). அச்சுவேலி: சி.செல்லத்துரை, இரசிகமணியின் இலக்கிய அன்பர்கள், நாவற்காடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1967. (யாழ்ப்பாணம்: ஈழநாடு அலுவலகம், சிவன்கோவில் மேலை வீதி).
(6), 58 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ.
இரசிகமணி கனக. செந்திநாதனின் ஐம்பதாவது அகவை நிறைவைக் குறிக்கும் முகமாக 24.10.1967 அன்று அவரது நண்பர்களால் வெளியிடப்பட்டுள்ள நூல். என்னுரை (சி.செல்லத்துரை), என் வாழ்த்துக்கள் (சி.கணபதிப்பிள்ளை), எழுத்துத் துறையில் எல்லாந் தெரிந்தவர் (இராஜ.அரியரத்தினம்), கை கொடுத்து உதவியர் (தி.ச.வரதராசன்), உங்களைப் போல நாலுபேரிருந்தால் (தேவன்-யாழ்ப்பாணம்), பிறந்த ஊருக்கு பெருமை தேடிக் கொடுத்த பெருமகன் (ஏ.ரி.பொன்னுத்துரை), இரட்டிப்பு மகிழ்ச்சி (சி.சுவாமிநாதன்), கால் நூற்றாண்டு இலக்கியப் பணி புரிந்தவர் (இ.நாகராஜன்), ரஷ்ய மொழியில் ஈழத்துச் சிறுகதைகள், நீங்கள் இரசிக மணிதான் (இளந்திரையன்), போற்றுகின்றோம் (F.X.C.நடராசா), தமிழக எழுத்தாளருக்கு (நா.பார்த்தசாரதி), வேண்டுகோள் (எஸ்.பொன்னுத்துரை), விமர்சன நூலுக்கு விமர்சனம் (வ.அ.இராசரத்தினம்), ஆற்றல் மிக்க விமரிசகர் (விஜய பாஸ்கரன்), கடமை தவறாதோர் (சி.ஞா.பரஞ்சோதி), எங்கள் ஆசிரியர் (ஏ.இருதயறோசா), இலக்கியம் அவரது மூச்சு (டொமினிக் ஜீவா), நாடறிந்த எழுத்தாளர் (தசரதன்), செந்திநாதன் பெற்ற பேறு (க.சி.குலரத்தினம்), A Bridge between the Older Pundits and the Moderns, ஆதார சுருதி (யாழ்வாணன்), நாயகியாகிய நாகம்மை (வள்ளிநாயகி இராமலிங்கம்), கவிநயம் காணும் கலைஞன் (க.வேந்தனார்), போற்றிப் புரிந்தான் பணி (அண்ணல்), ஊன்பாடுட உழைத்தாய் (செ.கதிரேசர்பிள்ளை), சிங்கநாதஞ் செய்யும் செந்திநாதன் (வி.கந்தவனம்), நடமடும் நூல் நிலையம் (அம்பி), மரபின்றி சிறந்தி வாழி, வெள்ளி விழாவில் பெற்ற விருது, சண்பக மலர், திறமையாளன் (மு.திருச்செல்வம்), இரசிகமணி எழுதிய நூல்கள் ஆகிய ஆக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது.