கோவைவாணன். சென்னை 600109: கோரல் வெளியீட்டாளரும், விநியோகஸ்தரும், இல.8, ஆறாவது குறுக்கு, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லை வாயல், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (சென்னை: மணி ஓப்செட்).
104 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-89226-11-9.
வவுனியூர் இரா.உதயணனின் நாவல்கள், சிறுகதைகள் ஆகியன பற்றிய ஒரு அறிமுகமாக கோவை வாணன் இந்நூலை உருவாக்கியுள்ளார். இதனை வவுனியூர் இரா.உதயணன் அறிமுகம், சிறுகதை, புதினம், நிறைவுரை ஆகிய நான்கு இயல்களில் ஆசிரியர் விரிவாக எழுதியுள்ளார். கோவைவாணன் தனது ஆய்வுக்கு மாறுபட்ட சூழலிலே வேறுபட்ட மனிதர்கள் (2009), வன்னிவலி (2015) ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளையும், சுருதி பேதமடைகிறது (2008), விதி வரைந்த பாதையிலே (2008), உயிர்க் காற்று (2010), வலியின் சுமைகள் (2015), பனிநிலவு (2017), நூல் அறுந்த பட்டங்கள் (2017) ஆகிய ஆறு நாவல்களையும் பயன்படுத்தியிருக்கிறார். கோவையில் 18.06.1955 அன்று பிறந்தவர் கோவைவாணன். 1996-2014 காலப்பகுதியில் நாமக்கல், உதகமண்டலம், கோவை அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் இவர்.