பால.சுகுமார் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, மார்கழி 2020. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
32 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இந்த நூல் நான்கு பெருமக்கள் பற்றிய நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறது. (1) பன்மைத்துவ வித்துவப் புலவர், மரபுவழி வைத்தியர் பூசகர் திருமிகு விஜயசிங்கம் காளியப்பு, (2) அகடவிகடப் புலவர், வைத்தியர், பூசகர், திருமிகு காளியப்பு விஜயசிங்கம், (3) கலாபூசணம் பல்துறை ஆற்றலாளன் புலவர், பூசகர், வைத்தியர் திருமிகு வில்லுப்பாட்டு காளியப்பு வீரசிங்கம், (4) உடுக்கடி கலைஞர் சமூக சேவகர் திருமிகு காளியப்பு பாலசிங்கம் ஆகிய நான்கு பதிவுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்நூலாசிரியர் பால.சுகுமார் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட முன்னாள் பீடாதிபதி, நுண்கலைத்துறை தலைவர், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிலையத்தின் இணைப்பாளராகக் கடமையாற்றியவர். ஈழத்து இசை, நடன, நாடக புலமையாளர்.