15945 கலைமுகம்: காலம் தந்த வரம்: கலைத்தூது நீ.

மரிய சேவியர் அடிகள் 1939-2021. கி.செல்மர் எமில் (பொறுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2021. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராப்பிக்ஸ், 54, இராஜேந்திரா வீதி).

96 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 27.5×20.5 சமீ.

திருமறை கலாமன்றத்தின் அரையாண்டிதழான ‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் 72ஆவது இதழ் (ஏப்ரல்-செப்டெம்பர் 2021) கலைத்தூது நீ. மரியசேவியர் அடிகளின் (03.12.1939-01.04.2021) சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. வழமையான கலை இலக்கியக் கட்டுரைகளுடன் அடிகளாரின் நினைவாக விருட்சம் ஒன்றின் விதையானவரே விடை தந்தோம் – கவிதை (புலோலியூர் வேல்நந்தன்), கலையுணர்வும் தமிழறிவும் கலந்தளித்த ஆசான் (அமுது ஜோசப் சந்திரகாந்தன்), வாழி நிந்தன் மேன்மையெல்லாம் (மு.புஷ்பராஜன்), சமகாலத்தில் அதிசயங்கள் நிகழ்த்தியவர் (சோ.தேவராஜா), நினைவில் வாழும் மரிய சேவியர் அடிகளார் (லெ.முருகபூபதி), அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை (செல்வம் அருளானந்தம்), தமிழ்ப் பண்பாட்டுக் கோலங்களை அடையாளம் காட்டியவர் (கந்தையா ஸ்ரீகணேசன்), மரிய சேவியர் அடிகளாரின் ஒப்பற்ற கலைப்பயணம் (நா.யோகேந்திரநாதன்), பாரம்பரிய கலைப் பரிமாணங்களின் மீளெழுச்சிக்குப் பங்காற்றியவர் (குயின்ரஸ் துரைசிங்கம்), ஆசிரியத் தலையங்கங்களின் ஊடாக காலத்தின் தடங்களைப் பதித்துச் சென்ற மரிய சேவியர் அடிகள் (சி.விமலன்), மரிய சேவியர் அடிகளார் எழுதிய நாடகங்கள் ஆகிய ஆக்கங்களையும் முதல் 41 பக்கங்களில் உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்