அந்தனி ஜீவா. கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், 57, மகிந்த பிளேஸ், 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
viii, 56 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14.5 சமீ.
இலங்கை தமிழ் இலக்கியத்தில் மலையக இலக்கியம் என்ற தனித்துவம் மிக்க இலக்கிய முயற்சிகள் பேசப்படுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்த மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள் பற்றி நவமணி வார இதழில் மலைச்சாரல் என்ற பகுதியில் ‘மலையக மக்கள் கவிமணி சி.வி. சில நினைவுகள்’ என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதிய கட்டுரைத் தொடர் ‘சி.வி.சில நினைவுகள்’ என்ற தலைப்பில் 2002இல் நூலுருவில் வெளிவந்திருந்தது. அப்பிரதியின் திருத்திய நூல் வடிவம் இது. சி.வி. நினைவுகள், முதல் சந்திப்பு, ஒரு கவிஞனின் கனவுகள், சிலி நாட்டு சிகப்பு குயில், காலத்தை வென்ற கைலாஸ், நாட்டார் பாடல்களில் நாட்டம், சி.வி.யின் படைப்புலகம், சி.வி.யின் ஆளுமைகள், தேயிலைத் தோட்டத்திலே, மக்கள் கவிமணி-ஓர் அங்கீகாரம், சி.வி.யின் நாவல்கள், இனிப்படமாட்டேன், ஆவேசம் மிக்க ஆண்மை, கவிஞனின் மரணம், சி.வி.யின் பசுமையான நினைவுகள் ஆகிய 15 இயல்களில் இந்நூல் விரிந்துள்ளது. பின்னிணைப்பாக மக்கள் கவிமணி சி.வி.யின் வாழ்வும் பணியும் என்ற கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது.