15947 சி.வை.தா. பற்றிய பதிவுகள்-ஒரு மீள்நோக்கு.

செல்வஅம்பிகை நந்தகுமாரன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், ‘அறிவாலயம்’, இல.28, குமாரசாமி வீதி, கந்தர்மடம், ஜனவரி 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

19ஆம் நூற்றாண்டிற்குப் பெருமைபெற்றுத் தந்த ஈழத்தறிஞர்களின் வரிசையில் சி.வை.தாமோதரம்பிள்ளை (12.09.1832-01.01.1900) முக்கியமானவர். இந்நூலில் சி.வை.தா.வின் வாழ்வும் பணிகளும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. திருமதி செல்வஅம்பிகை நந்தகுமாரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சிறப்புப் பட்டதாரியாவார். அங்கு தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

14404 பாட்டும் விளையாட்டும்(கிராமியச் செல்வங்கள்).

வெற்றிமகன் (இயற்பெயர்: வெற்றிவேல் விநாயகமூர்த்தி). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1997. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). (12), 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,