பால சுகுமார் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, மே 2015. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
(6), 158 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
யாழ்ப்பாணத்தில் பிறந்து பிரான்ஸ் நாட்டின் மொந்தினி நகரில் மறைந்த கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் என்ற இயற்பெயர் கொண்ட அமரர் கவிஞர் கி.பி.அரவிந்தன் (17.09.1953-08.03.2015) ஈரோஸ் அமைப்பிலும், தன் நண்பர்களிடையேயும் ‘சுந்தர்’ என அறிமுகமாகியிருந்தவர். அவருடனான மலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளும் குறிப்புகளும் முகநூல் வழியாகவும், இணைய வழியாகவும், உயிர் எழுத்து, மணற்கேணி, காக்கைச் சிறகினிலே ஆகிய சஞ்சிகைகளில் இருந்து நேரடியாகவும் பெறப்பட்டவை. சமூக அரசியல் விடுதலைப் போராளியாகத் திகழ்ந்த கி.பி.அரவிந்தன் அவர்கள் எழுத்து, ஊடகம், பண்பாடு, எனப் பன்முகத் தளங்களில் ஆளுமைமிகுந்தவராக இயங்கியவர். இந்நூலிலுள்ள படைப்பாக்கங்கள் அவரது பன்முக ஆளுமையை விரிவாகப் பதிவுசெய்கின்றன.