பெரியதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, வைகாசி 1998. (கொழும்பு 6: வின்னர்ஸ் அச்சகம், 30, நிஹால் சில்வா மாவத்தை, கிரிலப்பனை).
xxxii, 371 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×14 சமீ.
காவியப் பாடசாலைகளிலும் குருகுல வழிநடத்தலிலும் உருவாகி, மரபு வழியாக வளர்ந்து விளங்கிப் புகழ் பெற்றவர் புலவர்மணி. மட்டக்களப்பு கலை இலக்கியப் பண்பாட்டு வளர்ச்சியில் சுவாமி விபலானந்தர் வழிநின்று அவரின் நேரடி இலக்கியப் பரம்பரை எனப் பாராட்டும் அளவிற்கு வாழ்வும் புகழும் பெற்றவர். இவரின் இலக்கியப் பெறுமானம் மிக்க நூல்கள் முன்பு வெளிவந்து சிறப்புப் பெற்றன. இந்நூற்றொகுதியினூடாக புலவர்மணி அவர்களின் ஆக்கங்களும் அவரைப் பற்றிய கற்றோரின் ஆக்கங்களும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நூற்றொகுதியூடாக நாம் புலவர்மணியைப் பற்றிய ஓர் அகண்ட பார்வையையும் அவரின் பன்முகப்பட்ட புலமையையும் உணரக்கூடியதாக உள்ளது. புலவர்மணி அவர்களுடன் சமகாலத்தில் பழகிய அறிஞர்களினதும் அவரை நன்கு ஆராய்ந்து அறிந்த பெரியோர்களதும் இக்கட்டுரைகள் புலவர்மணி அவர்களைச் சித்திரிக்கும் நல்ல தகவல் ஏடாகும்.