சோ.இரா. தாமரைத்தீவான் (மூலம்), தா.சி.ஆனந்தம் (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: சோ.இராசேந்திரம், 25/4 இலிங்க நகர், 1வது பதிப்பு, மார்ச் 2016. (திருக்கோணமலை: ஸ்ரீராம் பதிப்பகம், இல. 159 ஏ, கடல்முக வீதி).
vi, 70 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ.
தாமரைவில் (கடற்கரை/வெம்பு/குளம்/பள்ளி/வயல்), ஈச்சந்தீவு (கரைச்சை/ ஓடை/ பள்ளி/ கோயில்/ கட்டையாறு), கண்டற்காடு (நாலாறு/ களப்பு/ குல்லா/ ஊர்திடல்/ கோயில்), கொட்டியாபுரம் (முத்துறை/ கோட்டையாறு/ அந்தோனியார்/ சின்னப்பாலம்/ படம்), மட்டக்களப்பு (ஈஸ்ரன் பஸ்/ ஆசிரியர் கலாசாலை/ சிவானந்தா/ வாவி/ கோட்டை), மலையகம் (புகைவண்டி/பதுளை/ கந்தகெதரை/ தமிழ்ப் பிரிவு/ தேயிலைத் தோட்டம்), கந்தளாய் (குளம்/ வாய்க்கால்/ போ.காடு, கரும்பு/ குடியேற்றம்), உப்பாறு (இருதுறை/ றப்பர் தோட்டம்/ கடற்கரை/ பாசி/ முந்திரி), அகதிமுகாம் (கிளபன்பேக்/இடப்பெயர்ச்சி/ நிவாரணம்/ துணிவீடு/ கழிப்பு), திருக்கோணமலை (நேவி/ வத்தை/ கோட்டை/ வெந்நீர்/ மயமாக்கல்) ஆகிய பத்து அத்தியாயங்களில் ஆசிரியரின் மலரும் நினைவுகள் விரிந்துள்ளன. மேலும் பிற்சேர்க்கைகளாக பாரதசக்தி மகாகாவியம், இராவண காவியம், இனிய பாடல் சக விளக்கம், மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், ஆய்வறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி, கவிதை அன்றும் இன்றும், மனிதம் (கவிதை), மெய்ப்பொருள் (கவிதை) ஆகிய ஆக்கங்களும் மேலதிகமாக இடம்பெற்றுள்ளன.