சசி வித்தியானி (தொகுப்பாசிரியர்). ஐக்கிய அமெரிக்கா: iPmCG Inc, Publishing Division, Suite No. 100, 3311 Beard Road, Fremont, California 94555, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (Sri Lanka: Design Waves).
(7), 8-180 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
கிழக்கிலங்கை, பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞரும், சிறுகதைப் படைப்பாளியும், இலக்கிய விமர்சகருமான அமரர் சண்முகம் சிவலிங்கம் (19.12.1936-20.04.2012) அவர்களின் மறைவின் ஓராண்டு நினைவாக அவரது உறவினர்கள், நண்பர்கள், பிரமுகர்கள் ஆகியோரின் நினைவஞ்சலிக் குறிப்புகளையும், அமரர் ‘சசி’ யின் முதல் பிரசுரிப்பு, பிரபல்யமான கவிதை, பெரிதும் பேசப்பட்ட ‘இருப்பியல்வாதம்’ பற்றிய அவரது கட்டுரை, இதுவரை பிரசுரமாகாத அவரது மூன்று கவிதைகள், ‘பிரகஷ்த்தம்’ என்ற சிறுகதை ஆகிய படைப்பாக்கங்களையும் உள்ளடக்கியதாக இம்மலர் வெளிவந்துள்ளது. ‘ஸ்டீபன் மாஸ்டர்’ எனஅறியப்பெற்ற இவர் கல்வித்துறையில் ஆசிரியராகப் பணிபுரிந்து பாண்டிரப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். ‘நீர் வளையங்கள்’ (1988), ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்” (2010), ‘காண்டாவனம் (2014)’ ஆகிய நூல்கள் இவரது படைப்பாக்கங்களாகும். காண்டாவனம் இவரது மறைவின் பின்னர் குடும்பத்தினரால் தொகுத்து வெளியிடப்பட்டது.