கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை. சுன்னாகம்: கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).
(6), 54 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18.5×12.5 சமீ.
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் 1854-1922 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வடமொழி தென்மொழிப் புலமைவாய்ந்த பெரும்புலவராவார். வாழ்நாள் முழுவதும் சைவ நற்றொண்டும், செந்தமிழ்த் தொண்டும் செய்து புகழீட்டியவர். அமரர் சி.வை. தாமோதரம்பிள்ளையவர்கள் தாபித்த ஏழாலைத் தமிழ் வித்தியாசாலையிலும், வண்ணார்பண்ணை நாவலர் வித்தியாசாலையிலும் 42 வருடங்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் வித்துவ அங்கத்தவராயிருந்தவர். அறுபதுக்கும் மேற்பட்ட செய்யுள் நூல்களையும், வசன நூல்களையும் உரை நூல்களையும் இயற்றித்தந்தவர். புலவரின் வாழ்க்கை வரலாற்றை சுவையான சம்பவக் கோர்வைகளாக இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார்.