எஸ்.எதிர்மன்னசிங்கம். மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, 7 ஞானசூரியம்; சதுக்கம், 1வது பதிப்பு, ஜுலை 1993. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்).
viii, 46 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 18×12.5 சமீ.
விபுலம் தனது மூன்றாவது வெளியீடாக புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை பற்றிய அறிமுக நூலொன்றை வெளியிடுகிறது. இந்நூலின் ஆசிரியர் கிழக்கு மாகாண அமைச்சில் கலாசார பணிப்பாளராகக் கடமைபுரியும் எஸ்.எதிர்மனசிங்கம் அவர்கள். வெளியீட்டுரை, முன்னுரை (சி.மௌனகுரு), என்னுரை (எஸ்.எதிர்மன்னசிங்கம்) ஆகியவற்றைத் தொடர்ந்து, வாழ்க்கை வளம், தமிழ் இலக்கியப்பணி, சமய சமூகப் பணி, புலவர்மணியுடன் தொடர்பு கொண்டிருந்த பெரியார்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஈழத்துக் கவிதைப் பாரம்பரியத்துக்குக் கிழக்கின் பங்களிப்பில் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை முக்கியமானவர். மரபுவழிப் பண்டிதராயினும் எளிமையும், அழகும் அவர் கவிதைகளிற் பளிச்சிடும். நவீன தமிழ்க் கவிதையின் பண்புகள் பலவற்றை அவர் கவிதைகள் கொண்டுள்ளன. புலவர்மணி கவிஞர் மாத்திரமல்லர். அவர் கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், இலக்கிய ஆய்வாளர், மேடைப் பேச்சாளர். இத்தனைக்கும் மேலாக நாட்டுப் பற்றும் சமூகப்பற்றும் மிக்க மனிதாபிமானி. சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகக் குரல் தந்தவர். சிறுமை கண்டு பொங்குதல் கவிஞர் இயல்பு. இந்த இயல்பு அவருக்கு இருந்தது. அது வாழ்க்கையிலும் விளையாடியது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1891).