செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: க.குணராசா, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்).
16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
எழுத்தாளர் செங்கை ஆழியான், 1.3.2012 அன்று மறைந்த தனது மூத்த சகோதரரான எழுத்தாளர் புதுமைலோலன் அவர்களின் 31ஆம் நாள் நினைவையொட்டி எழுதிய மனப்பதிவுகள் இவை. பயிற்றப்பட்ட ஆசிரியரான புதுமைலோலன் தமிழரசுக்கட்சியில் இணைந்துகொண்டு அதன் பேச்சாளப் பீரங்கியாக வலம் வந்தவர். ஈழகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் ஏராளமான சிறுகதைகளை எழுதியவர். தமிழகப் பத்திரிகைகளான காதல், மஞ்சரி, பிரசண்ட விகடன், உமா போன்றவற்றிலும் இவரது கதைகள் அந்நாளில் பிரசுரமாகியிருந்தன.