15960 ஜீவநதி: க.சட்டநாதன் பவளவிழாச் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

80 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 28×20.5 சமீ.

க. சட்டநாதன் பவளவிழாச் சிறப்பிதழ் பற்றிய ஆசிரியர் க. பரணீதரன் அவர்களது அறிமுகத்துடன் சட்டநாதன் கதைகளில் போரும் வாழ்வும் (எம்.ஏ.நுஃமான்), கலையழகோடு இயைந்த சமூக நோக்கெனும் படைப்புப் பக்குவம்: சட்டநாதனின் சிறுகதைகளை முன்வைத்த ஒரு தேடல் (இ.இராஜேஸ்கண்ணன்), எம்.வேதசகாய குமாரின் புனைவும் வாசிப்பும் நூலிலிருந்து, மனித நேசம் சாஸ்வதமானது: சட்டநாதன் படைப்புக்கள் பற்றிய ஒரு குறிப்பு (குப்பிழான் ஐ.சண்முகம்), நீளும் பாலை: சட்டநாதன் எனும் ஆண்மொழிதல் (ந.மயூரரூபன்), க.சட்டநாதனின் படைப்புலகம்: சட்டநாதன் கதைகள் தொகுதியை முன்வைத்து (தெளிவத்தை ஜோசப்), க.சட்டநாதனின் புனைவுகளில் பெண்கள் குழந்தைகள் (தி.செல்வமனோகரன்), சட்டநாதனின் படைப்புக்களில் பாத்திர வார்ப்பும் உறவுகள் குறித்த சித்திரிப்பும் அவர் படைப்புகளுக்கூடான பயணிப்பு அனுபவத்தின் பதிவுகள் (ந.சத்தியபாலன்), சட்டநாதன் சிறுகதைகளில் உளவியல் உள்ளடக்கம் (கோகிலா மகேந்திரன்), சட்டநாதனின் முக்கூடல் (எம்.கே.முருகானந்தன்), நீர் மேட்டில் தழும்பும் இலை: க. சட்டநாதன் கவிதைகள் (க.கருணாகாரன்), மனிதம் பேசும் எழுத்தாளர் சட்டநாதன் (இரா.சிவச்சந்திரன்), அன்பில் இழைக்கப்பட்ட கதைகள் (த.அஜந்தகுமார்), உணர்வில் மொழி எழுதி துயரில் கரையும் வெளி (சி.ரமேஷ்), சட்டநாதன் கதைகள் (ஜி.ரி.கேதாரநாதன்), சட்டநாதனின் மாற்றம் (அருண்மொழிவர்மன்) ஆகிய சட்டநாதன் தொடர்பான படைப்பாக்கங்களும், க.சட்டநாதன் எழுதிய காத்திருப்பு, தொடுகை, புலன்களில் அவள், உணர்ச்சிகள், அன்பு, நீக்கம், பக்தி ஆகிய கவிதைகளும், சட்டநாதனுடனான க.பரணீதரன் (ஆசிரியர்) அவர்களின் நேர்காணலும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் P 750).

ஏனைய பதிவுகள்

11963 வாழ்வுக்கும் விடுதலைக்கும்: பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரைகள் 2012-2015.

முருகேசு சந்திரகுமார். கிளிநொச்சி: மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஜுன் 2015. (கொழும்பு: ஏஜே அச்சகம், தெகிவளை). x, 293 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: ரூபா

11425 இரசாயனக் கணிப்புகள்.

மயிலு செல்வரத்தினம் (ஆங்கில மூலம்), தே.தில்லையம்பலம் (தமிழாக்கம்). பேராதனை: பேராசிரியர் மயிலு செல்வரத்தினம், இரசாயனவியல் இணைப்புப் பேராசிரியர், பேராதனை வளாகம், இலங்கைப் பல்கலைக் கழகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம்