15961 ஜீவநதி: தெணியான் பவளவிழாச் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (இதழாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 28.5×20.5 சமீ.

ஈழத்தின் முக்கிய இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான சாஹித்திய ரத்னா தெணியானின் பவளவிழா சிறப்பிதழாக ஜீவநதியின் 106ஆவது இதழ் (ஆடி 2017) வெளிவந்திருக்கின்றது. தெணியானின் படைப்புக்கள், அவருடனான அனுபவக் கட்டுரைகள், தெணியான் தமிழுலகுக்குத் தந்த இரு சிறுகதைகள், தெணியானின் நேர்காணல்கள், வாழ்த்துக் கவிதைகள் எனப் பதினாறு தலைப்புகளில் பல ஆக்கங்களைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. தெணியானின் இலக்கியத் தடம்: எதார்த்தங்களும் மாயைகளும் (மு.அநாதரட்சகன்), இன்னொரு அதிர்வின் கோணம் (இ.சு.முரளிதரன்), தெணியானின் நான்கு குறுநாவல்கள் (தாட்சாயணி), தெணியான் எனும் ஆளுமை-என் வாசிப்பில் (மேமன்கவி), சமூக வரலாற்றாசிரியனாக நாவலாசிரியன்: தெணியானின் நாவல்களை முன்வைத்த புரிதல் (இ.இராஜேஸ்கண்ணன்), தெணியானும் நானும் (கே.எஸ்.சிவகுமாரன்), தெணியானின் ஆக்கங்களும் மார்க்சிய அழகியலும் (சபா. ஜெயராசா), சலிப்பின்றி எழுதும் சலிக்க வைக்காத புத்தாற்றல் எழுத்தாளர் தெணியான் (எம்.கே.முருகானந்தன்), சாகித்யரத்னா தெணியான் பவளவிழாக் காணுகிறார் (சோ.பத்மநாதன்), பனையின் நிழலில் நான் கண்ட தெணியான் (கார்த்திகாயினி சுபேஸ்), தெணியான் எனும் வித்தகன் (பொலிகை ஜெயா), தெணியானின் படைப்புலகத்தில் என்னை இருத்தி உணர்தல் (ஜீவமுரளி), தெணியானின் கருத்தியல் தளம் (ந.இரவீந்திரன்), தமிழ் நாவல் வரலாற்றில் தடம் பதித்துள்ள கானலின் மான் (செ.யோகராசா), தெணியானின் இருளில் நடக்கின்றோம் (தெணியான்), சிறுகதையில் தடம் மாறாமல் பயணிக்கும் தமிழ் சினிமா (கொற்றை பி.கிருஷ்ணானந்தன்), திரிபுகளை எதிர்த்துக் கொள்பவர் (செல்லக்குட்டி கணேசன்), வாழ்த்துக் கவிதை-1 (வதிரி சி.இரவீந்திரன்), வாழ்த்துக் கவிதை-2 (சி.சிவசரவணபவன்) ஆகிய படைப்பாக்கங்களை இச்சிறப்பிதழ் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Промокоды «Мелбет» 2025 на данный момент: особые премия коды букмекера возьмите фрибеты, как их приобрести а еще вывести

Content Камо вводить промокод Мелбет Кэшбэк во Мелбет в видах постоянных клиентов Застрахование ставки возьмите необходимую сумму вплоть до 10000₽ Нарушение этого адденда может привести