பால. சுகுமார்; (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, இணை வெளியீடு, மட்டக்களப்பு: அனாமிகா பதிப்பகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
iv, 164 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்தின் முற்போக்கு முகமாய் இருந்த டொமினிக் ஜீவா (27.6.1927-28.01.2021) அவர்கள் மறைந்து சில காலம் கடந்த நிலையில், அவரது நினைவுகளும், பணிகளும் இலக்கிய முயற்சிகளும், மல்லிகை-மல்லிகைப் பந்தல், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என விரிந்து கிடக்கும் ஒரு பெரிய பரப்பில் இலக்கியர்களும் இலக்கிய ஆர்வலர்களும் தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் நினைவுகூரப்படும் ஒருவராக அவர் நினைவுகள் சமூகவெளியில் பகிர்ந்துகொள்ளப்பட்டுவருகின்றன. அவரது மறைவின் பின்னர் சமூக ஊடகங்களில் பலரும் அவரது நினைவலைகளில் தங்கள் மன ஓட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். அவை இங்கு ஒரு தொகுப்பாய் அவரது நினைவாக வெளியிடப்பட்டுள்ளது.