எழுத்தாளர் குழு. கல்வி வெளியீட்டுத்திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2013. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ).
vii, 304 பக்கம், விலை: ரூபா 427., அளவு: 21×13.5 சமீ.
இந்நூல் அநுராதபுரக் கால முக்கிய வரலாற்று மூலாதாரங்கள் (எஸ்.பி.ஹெட்டியாராச்சி), இலங்கையின் அமைவிடமும் பௌதிக அமைப்பும் (சிரிமல் ரணவெல்ல), அநுராதபுரக் கால குடியேற்றங்களின் பரம்பல் (ஜீ.வீ.பீ.சோமரத்ன), இலங்கையில் புத்த சாசனம் நிறுவப்படல் (மென்டிஸ் ரோஹணதீர), அநுராதபுரக் கால அரசியல் வரலாறு (சிரிமல் ரணவெல்ல), அநுராதபுரக் கால அரசியல் நிர்வாகம் (மங்கள இலங்கசிங்க), அநுராதபுரக் கால பொருளாதார நடவடிக்கைகள் (சிரிமல் ரணவெல்ல), அநுராதபுரக் கால சமூகப் பண்பாட்டு பரம்பல் (சமூகம்- எஸ்.பி.ஹெட்டியாராச்சி, சமயம்- மங்கள இலங்கசிங்க, இலக்கியமும் கலைகளும்-மென்டிஸ் ரோஹணவீர) ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுகள் C.W.நிக்கலஸ், செனரத் பரணவிதான ஆகியோரால் எழுதப்பட்ட A Concise History of Ceylon என்னும் நூலின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்நூலுக்கான எழுத்தாளர் குழுவில் பேராசிரியர் எஸ்.பி.ஹெட்டியாராய்ச்சி, சிரிமல் ரணவல்ல, ஜீ.வீ.பீ.சோமரத்ன, மென்டிஸ் ரோகணதீர, மங்கள இலங்கசிங்க ஆகியோர் பணியாற்றியுள்ளனர். நூலின் தமிழாக்கத்தை வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி முன்னாள் பிரதி அதிபர் அருட்சகோதரி மேரி டொனேட்டா மேற்கொண்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65490).