அ.சி.உதயகுமார். யாழ்ப்பாணம்: Institute of Political Studies, உடுவில், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 37 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என 1994 ஓகஸ்ட் இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின்பொது கூறத்தொடங்கிய சந்திரகா குமாரணதுங்க, 1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் அதனை முன்வைத்திருந்தார். தனது கருத்துக்களை ஒரு தென்னிலங்கை தொலைக்காட்சி நேர்காணல் மூலமும், அவ்வப்போது கொழும்பில் நிகழ்த்திய வானொலி நிகழ்ச்சிகளின்போதும் வெளிப்படுத்திய இவரது உரைகள் தொடர்பாக தென்னிலங்கை பத்திரிகைகளில் கட்டுரைகள் மூலம் பலரும் விவாதித்திருந்தனர். இக்காலப்பகுதியில் பலத்த பொருளாதாரத் தடை, மின்சாரம் இன்மை ஆகிய புறக்காரணிகளால் இவ்வுரையையும், அது தொடர்பான உரையாடல்களையும், அரசியல்வாதிகளின், அரசியல்துறை அறிஞர்களினது உரைகளையும் கேட்கும் வாய்ப்பை பெரும்பான்மையான தமிழ் மக்கள் இழந்திருந்த அக்கால கட்டத்தில், இந்நூல் தமிழ் மக்களுக்கு, அவர்களது தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் சந்திரிக்காவின் உரையையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தகவல்களையும் விவாதித்து வழங்கி அவர்களது அரசியல் சிந்தனையை இற்றைப்படுத்தும் வகையில் இந்நூலை உதயகுமார் எழுதியிருக்கிறார்.