தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, ஜுன்2016. (சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ்).
160 பக்கம், விலை: இந்திய ரூபா 125.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-932995-5-5.
தொடர் இராணுவ ஆக்கிரமிப்பும், பரவும் சிங்களக் குடியேற்றங்களும், தமிழ் அரசியலை அழிக்கும் சிங்களப் பேரினவாத அரசியலும், உரிமையும் சமத்துவமும் மறுக்கும் அதிகாரப் போக்கும், தமிழர் போராட்டத்தை அழிக்கும் இலங்கை அரசின் நிகழ்ச்சித் திட்டமும் ஈழத் தமிழ் இனத்தை தமிழீழ தீர்வுக்கே மீண்டும் மீண்டும் நிர்பந்திக்கின்றன என்று வலியுறுத்தும் இந்த நூல் பேரினவாத அரசொன்றின் கொடிய முகங்களை அம்பலம் செய்கிறது. போருக்குப் பிந்தைய ஈழத்து மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் குறித்து விபரிக்கும் இந்தப் புத்தகம் ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஈழ மக்களின் வாழ்வுப் போராட்டம் குறித்தும் பேசுகின்றது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தமிழ் மக்கள் தேர்தலில் தோற்கடித்தமை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் குறித்தும் இந்தப் புத்தகம் பதிவு செய்துள்ளது. வலிமை மிகுந்த ஈழக்குரலாக கருதப்படும் தீபச்செல்வன் ஈழத்துக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர். இனப் படுகொலை நிகழ்த்தப்பட்ட ஈழ மண்ணிலிருந்து தனது தீவிரமான எழுத்துக்களின் மூலம் ஈழ மக்களின் வாழ்வையும் போராட்டத்தையும் 31 கட்டுரைகளின் வழியாக இந்நூலில் பதிவு செய்கிறார்.