மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு. அவுஸ்திரேலியா: மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு, ஐந்தாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு, சிட்னி, 1வது பதிப்பு, ஜுன் 1996. (சென்னை 600005: கண்ணப்பா ஆர்ட் பிரிண்டர்ஸ்).
xvi, (8), 264 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
அவுஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் 1992 ஒக்டோபர் 3-5 திகதிகளில் நடைபெற்ற 5ஆம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டின் கருத்தரங்குகளில் முன்வைக்கப்பட்ட ஆய்வுகளையும் கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இதுவாகும். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஆதரவில் சிட்னிவாழ் தமிழ் மக்களால் ஒழுங்குசெய்யப்பட்ட இம்மாநாடு 3 நாட்களாகத் தமிழரின் பாரம்பரியம், பண்பாடு, கலை முதலியவற்றைக் கொண்ட பெரும் விழாவாக நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் மற்றைய மாநிலங்களும், அண்டை நாடுகளான நியுசிலாந்து, பீஜித் தீவுகள், பப்புவா நியுகினியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ்ப் பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர். மாநாட்டுக் கட்டுரைகள் ஆங்கில மொழியில் இடம்பெற்றுள்ளன. ‘தமிழ் மொழி-மொழியியல்’ பிரிவில் அரங்க முருகையன், ஹெலன் பிரேசர், நிழல் சந்திரா, பீ.வீரப்பன், கே;.இராமசாமி, இராமலிங்கம் அம்பிகைபாகர் ஆகியோரும், ‘தமிழ் கலாச்சாரப்’ பிரிவில், எஸ்.முத்துக்குமாரன், சுப திண்ணப்பன், இந்திரகுமாரி யோகராஜா, எம்.ஆர். பாலகணபதி ஆகியோரும், ‘தமிழர் வரலாறு’ என்ற பிரிவில், சி.பத்மநாதன், பீ.எஸ்.சர்மா ஆகியோரும், ‘தமிழ் இலக்கியம்’ என்ற பிரிவில் மு.இராமலிங்கம், மகேசன் இராசநாதன், ஐ.மீனாட்சிசுந்தரம், பரமேஸ்வரி நல்லதம்பி, எம்.தனபாலசிங்கம், ஈ.வீ.சிங்கம், ஆர்.நடராஜன், சக்திப்புயல் தேவகுமாரன் ஆகியோரும், ‘தமிழ் இசை’ என்ற பிரிவில் வித்துவான் எஸ்.கே.சிவபாலன், எஸ்.பரம் தில்லைராஜா ஆகியோரும், ‘கப்பல்துறை, கட்டடக்கலை’ பிரிவில் க.ப.அறவாணன், எஸ்.ஆறுமுகம் ஆகியோரும், ‘உலக அரங்கில் தமிழ்’ என்ற பிரிவில் சீ.ஜே.எலிட்சர், கலையரசி சின்னையா, மதி ஞானசம்பந்தன், வித்துவான் செல்லப்பா கவுண்டன், வி.சந்திரசேகரன், ஆர். பொன்னு எஸ்.கவுண்டர் ஆகியோரும் தத்தம் படைப்புகளை வழங்கியுள்ளனர்.