15975 கண்டிச் சீமையிலே: கோப்பிக்கால வரலாறு 1823-1893.

இரா.சடகோபன். கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி).

336 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1800.00, அளவு: 25×18சமீ., ISBN: 978-955-811-06-9.

சுகவாழ்வு சஞ்சிகை ஆசிரியர் சட்டத்தரணி இரா. சடகோபன் அவர்களால் எழுதி வெளியிடப் பட்டுள்ள ‘கண்டிச் சீமையிலே’ என்ற இந்த வரலாற்று நூல் இலங்கையின் பெருந்தோட்ட வரலாற்றின் முதற் கட்டமான கோப்பிப் பயிர்ச்செய்கையின் தோற்றத்தையும் பின்னர்  அது படிப்படியாக வளர்ச்சியடைந்து ஒரு குறித்த காலத்தில் இலங்கை பொருளாதாரத்தின் ‘பொற்காலம்’ என்ற பெயரையும் பெற்ற பின் மிகக் குறுகிய காலத்திலேயே ஹெமிலியா வெஸ்டாரிக்ஸ்  என்ற நோய்க்கு இலக்காகி மடிந்து போன வரலாற்றையும் கூறுகின்றது. மலையக தமிழ் மக்கள் இலங்கையின் கோப்பித் தோட்டங்களில் தொழில் புரிவதற்காக 1820 களில் முதன் முறையாக அழைத்து வரப்பட்டதையும் அதன் பின் வந்த 7 தசாப்த காலங்களில் அவர்கள் எவ்வாறு இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வியர்வையையும் இரத்தத்தையும் இறுதியில் உயிரையும் அர்ப்பணித்தார்கள் என்பதை பதிவு செய்யும் ஒரு வரலாற்று ஆவணம் தான் இந்நூல். அதன் பின் 1977 வரை தேயிலை ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் இந்நாட்டுக்கு அந்நிய செலாவணியை உழைத்து தம்மை கட்டெறும்பாக்கி குறுகிப் போனவர்களே இவர்கள். 1823முதல் 1893 வரையிலான எழுபது ஆண்டு காலகட்ட வரலாற்றை இந்நூல் விரிவாகப் பதிவுசெய்கின்றது. 192 வரலாற்றுப் புகைப்படங்களை இவ்வாவணம் உள்ளடக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26191).

ஏனைய பதிவுகள்

Cleopatra And Slot Online game Of Igt

Content Cleopatra As well as Gambling establishment Number Cleopatra Along with Slotrank Calculation Betting Variety and you will Limit Win Can i Enjoy Cleopatra As