என்.சரவணன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 238 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-655-7.
இலங்கையின் அரசியல் வரலாற்றினூடாக மலையக மக்கள் எதிர்நோக்கிய மற்றும் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றி மிக ஆழ்ந்த அனுபவத்துடனும் கூர்ந்த ஆய்வுடனும் வாசகர்களுக்கு எளிதில் புரியும் வகையில் புத்தக வடிவில் தந்துள்ளார். மலையகம் குறித்த சமூக, அரசியல், வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள், ‘கள்ளத்தோணி’ எனும் கருத்தாக்கம், மலையக வாழ்வியலைத் திசை திருப்பிய உருளவள்ளி போராட்டம், மலையக அரசியலில் நேருவின் வகிபாகம் – இணைப்பு: நேரு-கொத்தலாவலை ஒப்பந்தம் 1954, 1800களில் இலங்கை பஞ்சாங்க நாட்காட்டி, முதலாவது சிங்கள தமிழ் இனக்கலவரம், ‘ப்ரஸ்கேர்டல்’ விவகாரம், முல்லோயா கோவிந்தன்: தொழிலாளர் வர்க்கத்தின் முதல் தியாகி, ‘தோட்டக்காட்டான்’ விவகாரம் நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது, தன்னெழுச்சியின் அரசியல்: ஒக்டோபர் 24 போராட்டம், நடேசையர்-மீனாட்சியம்மாள்: மலையகத்தின் விடிவெள்ளிகள், தேயிலையை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் டெய்லர், கொழும்பு: தமிழர் பிரதிநிதித்துவம், 83 கலவரத்தில் மலையகம், சிறிமாவும் இந்திராவும் பங்குபோட்ட மலையக மக்கள், இலங்கை-இந்திய கூட்டுச் சதி: சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம். பின்னிணைப்பு: சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், மீனாட்சியின் காதலால் உருவான முதலாவது முஸ்லிம்-சிங்கள மோதல் 1870, ஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா? சமஸ்கிருதமயப்படுத்தலா?, சிறையிலிருந்து சந்திரசேகரன் (நேர்காணல்), மலையகத் தலித்துகள், சில புரிதல்களும் நமது கடமைகளும், ஆதிக்க சாதி எதிர்பார்ப்புகளுடன் கணக்குத் தீர்த்தல், கருப்புத் தமிழன், நமது மலையகத்துக்கு ஜனாதிபதி விருது-எப்படி உருவானோம்?, குடியுரிமை ஆகிய 23 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.