அஹமது லெவ்வை ஜுனைதீன். கற்குடா: ஷுஹா வெளியீட்டகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).
56 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15சமீ., ISBN: 978-955-8409-25-1.
கல்குடா (முயடமரனயா) என்பது மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோரப் பிரதேசமாகும். கல்குடாவும் பாசிக்குடாவும் அருகருகே அமைந்துள்ளன. இப் பிரதேசம் வாழைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசமாகும். இங்கு வாழும் முஸ்லிம் மக்கள் பற்றிய ஒரு பூர்வீக வரலாற்றுக் குறிப்புகளை இந்நூல் கொண்டுள்ளது.