முருகு தயாநிதி. வாகரை: ஸ்ரீ சித்தி விநாயகர், சிவமுத்து மாரியம்மன் ஆலய பரிபாலன சபை, அம்பிலாந்துறை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: ஹரி அச்சகம், வெள்ளவத்தை).
xx, (24), 314 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-43173-0-7.
அம்பிலாந்துறை கிழக்கிலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊராகும். இந்நூல் இவ்வூர் பற்றிய பிரதேச வரலாற்றை விரிவாக விளக்குகின்றது. இந்நூல் இலங்கை பற்றி அறிமுகம், திருச்சியிலுள்ள அம்பிலாந்துறை, உலகநாச்சி வருகையும் அம்பிலாந்துறையும், அரசியல், ஆலய வழிபாடு, தீவுக் குடியிருப்பு பிரிந்த சென்றது, கல்வி, வாழ்வியல் சடங்கும் சம்பிரதாயங்களும், மந்திரமும் மக்கள் வாழ்வும், குடிமக்கள், கலைகள், விளையாட்டு, கிராமிய விளையாட்டுக்கள், சமூக சேவை நிறுவனங்கள் ஆகிய 14 இயல்களில் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக, சமூக செயற்பாட்டாளர்கள், போடி கல்வெட்டு, ஊஞ்சல் பாடல்கள், அம்மன் பத்து, அம்மன் காவியம் ஆகியன இணைக்கப்பட்டுள்ளன. கலாநிதி முருகு தயாநிதி இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்த் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார்.