கலைவாதி கலீல். மன்னார்: மன்னார் வாசகர் வட்ட வெளியீடு, மூர் வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 10: யூ.டீ.எச். கம்ப்யூ பிரின்ட், 51/42 மொஹிதீன் நஸ்ஜித் வீதி, மருதானை).
(2), 58 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×16 சமீ.
ஆசிரியரின் பவளவிழாவையொட்டி வெளிவரும் இந்நூலில் வில்பத்தில் என்ன நடக்கின்றது? சிறுகதை-நான் வரைந்த பள்ளி, ஓர் ஊடகவியலாளனின் வில்பத்து விசிட் ஆகிய மூன்று ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. வில்பத்து வன சரணாலயத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் காடழிப்பும் முஸ்லீம் மக்களின் குடியேற்றமும் பற்றிய ‘நேரடி ரிப்போர்ட்டாக’ ஆநசிரியரால் எழுதப்பட்ட இதிலுள்ள கட்டுரைத் தொடர் நவமணி இதழில் தொடராக வெளியிடப்பட்டிருந்தது. கலைவாதி கலீல் எழுத்தாளராக, கவிஞராக, ஓவியராக, நூலாசிரியராக, ஒலிபரப்பாளராக, விமர்சகராக, நடிகராக, ஊடகவியலாளராக, உதவி ஆசிரியராக, உதவி அதிபராக கடமையாற்றி பன்முக ஆளுமை கொண்ட ஒரு இலக்கியவாதியாவார். கலைவாதி கலீல் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்சமயம் பாணந்துறையில் வசிக்கின்றார். இவர் ஆரம்பத்தில் மதாறு முஹைதீன் முஹம்மது கலீல் என்ற பெயரில்தான் எழுத ஆரம்பித்தார். பின்னர் சர்தார், புரட்சிக் கவிஞன், மன்னிநகர் கலீல், மன்னாரான், புரட்சிதாசன் ஆகிய புனை பெயர்களிலும் இலக்கியம் படைத்தார். ஒரு வெள்ளி ருபாய் (சிறுகதைத் தொகுதி), உலகை மாற்றிய உத்தமர் (இயல் இசைச் சித்திரம்), கருவறையிலிருந்து கல்லறைக்கு, ஓ பாலஸ்தீனமே (கவிதைத் தொகுதிகள்), றோனியோக்கள் வாழுமா? (ஆய்வுக் கட்டுரை) ஆகியன அவரது இலக்கிய பிரசவங்களாகும்.