யதார்த்தன், பிரிந்தா (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: தொன்ம யாத்திரைக் குழுமம், விதை குழுமம், அக்கினிச் சிறகுகள், 1வது பதிப்பு, புரட்டாதி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).
31 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 20.5×14.5 சமீ.
தொன்ம யாத்திரை இதழின் மூன்றாவது இதழ் வடக்கின் கண்ணகை மரபின் தொடக்க இடமான அங்கணாமக்கடவை பற்றிய வரலாற்றுத் தேடலாக அமைந்துள்ளது. வலிகாமம் பிரதேசத்திலுள்ள அங்கணாமக்கடவையை தொன்ம யாத்திரைக்கான இடமாகத் தெரிவுசெய்து அதனைப் பற்றிய ஆய்வுகளை தொன்ம யாத்திரைக் குழுமம் மேற்கொண்டுள்ளது. இதில் ஈழத்தில் கண்ணகி வழிபாடு, தென்னிந்தியாவில் கண்ணகித் தொன்மம், ஈழத்தில் கண்ணகி வழிபாடு, ஈழத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் கண்ணகை வழிபாடு, வட இலங்கையில் கண்ணகை வழிபாட்டு மரபு, யாழ். குடாநாட்டில் கண்ணகை வழிபாடு, வன்னிப் பெருநிலத்தில் கண்ணகை வழிபாடு, சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடு, மரபுரிமையாகக் கண்ணகை மரபுக் கதைகள், வட ஈழத்தில் நிலவுகின்ற கண்ணகை மரபுக் கதைகள், அங்கணாமக்கடவை ஆகிய உபதலைப்புகளினூடாக இச்சிறுநூல் தகவல்களை பதிவசெய்துள்ளது.