மாசிலாமணி திருநாவுக்கரசு. மட்டக்களப்பு: மா.திருநாவுக்கரசு, குருக்கள்மடம், 1வது பதிப்பு, 2012. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).
(6), 406 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-53477-0-9.
பேரூர் பற்றிய பன்முகப் பார்வை, பண்பாடும் வளம் மிக்க விழுமியமும், அருள்பாலிக்கும் ஆலயங்கள், பெருமைசேர் பாடசாலைகள், பேரூரின் வாழ்வும் வளமும், ஏற்றம் கண்ட கல்வியாளர்களும் அவர்கள்தம் தொழில்நிலையும், தளஸ்தாபனங்களும் அவை தம் செயல்திறனும், பேரூரின் கலாசாரமும் தனித்துவமும், பேரூரின் புகழ்பூத்த புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை, குறைவில் நிறைவு, ஆதார அணை அனுபந்தம் ஆகிய பதினொரு இயல்களை குருக்கள் மடம் என்று இப்போது அறியப்படும் பேரூர் பற்றிய இப்பிரதேச வரலாற்று நூல் கொண்டுள்ளது. எழுத்தாளரும் சமூக சேவையாளருமான தேசகீர்த்தி கீர்த்தி ஸ்ரீ மாசிலாமணி திருநாவுக்கரசினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. கூட்டுறவு விற்பனை முகாமைத்துவத்தில் டிப்ளோமா தேர்ச்சி பெற்ற இவர், மண்முனை தென் எருவில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளராக சேவையாற்றி ஓய்வுபெற்றவர். பின்னாளில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய பொறியியல் கூட்டுறவுச் சம்மேளனத்தின் தலைவராகப் பணியாற்றியவர். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4708).