க.ஞானரெத்தினம், க.தா.செல்வராசகோபால் (தொகுப்பாசிரியர்கள்), நிழல்எட்வேர்ட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2003. (கனடா: றீ கொப்பி, தொரன்ரோ).
xxxii, 192 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: கனேடிய டொலர் 30.00, அளவு: 21×14 சமீ.
மட்டக்களப்பு மண் வளச் செல்வங்கள் பற்றிய உரைச்சித்திரங்களாக இந்நூல் தொகுக்கப்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தோன்றிய பல்வேறு நூல்களையும் நூலாசிரியர்களையும் நூல்களின் விடயப் பரப்புகளையும் முன்வைத்து அறிமுகப்படுத்துவதாகவும் இதிலுள்ள சில கட்டுரைகள் அமைகின்றன. மட்டக்களப்பு பற்றிய தகவல்களும் தரவுகளும், மட்டக்களப்பு மக்கள், சமுதாய நம்பிக்கைகள், சடங்கு-சம்பிரதாயம், வாழ்க்கை நெறி பற்றிய மக்கள் இலக்கியம், மட்டக்களப்பு மக்களின் தொழில்துறைகள், ஈழத்து மட்டக்களப்புப் பிரதேச பண்பாட்டுக் கோலங்கள், சித்திரை ஊஞ்சல், புவியியல் காரணமாக அமைந்த மட்டக்களப்பு இடப்பெயர்கள், மட்டக்களப்பு மண்வளக் கூத்துக்களிலே மகுடிக் கூத்து, மட்டக்களப்பு மண்வள மரபுத் தமிழ்ச் சொற்கள், கொம்புமுறி என்னும் கொம்பு விளையாட்டு, மட்டக்களப்பு மாநிலத்திலே பயிலப்படும் கூத்துக்கலை, மட்டக்களப்பு ஒரு சிறு வரலாறு, வசந்தன் கூத்து, மட்டக்களப்பு மக்கள் சமுதாய நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள், தேன் நாட்டு மீன் இசையோடு வான் கலக்கும் வில்லிசை, மட்டக்களப்பு மக்களின் யாழ்ப்பற்று சமுதாய நட்புறவு, வைகறைவாணன் நிகழ்ச்சித் தயாரிப்பு, மட்டக்களப்பு பண்டை வரலாற்று அடிச்சுவடுகள், மட்டக்களப்புத் தமிழியல் சார்ந்த நூல்கள் ஆகிய 18 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3227).