யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், தேன் தமிழ், கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, ஜுலை 2015. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி).
vi, 197 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-41392-1-3.
ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் யாழ்ப்பாணத்து நினைவுகள் எனும் தொடரில் வெளிவந்த ஆக்கங்களில் சிலவற்றைத் தொகுத்து, முதலாம் பாகம் ஜுலை 2014 இல் 30 வகையான தலைப்புகளின் கீழ், யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்வியல், கலாசாரம், பண்பாடு, தொழில் முறைமை போன்றவற்றை அனுபவ வாயிலாக விளக்கும் வகையில் வெளியிடப்பட்டிருந்தது. இவ்விரண்டாவது பாகத்தில் 31 முதல் 49 வரையான 19 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஹர்த்தால் கால நினைவுகள், பாஸ் நடைமுறையும் வடபுல மக்களும், பனங்காய் கால பழைய நினைவுகள், பட்டத்தை வட்டமிடும் நினைவுகள், அருகிப்போன பாரம்பரியங்கள், வாழ்வாதாரங்கள் தந்த சீட்டு முறை, யாழ்பபாண மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்திய சைக்கிள், பள்ளியில் பயின்ற நினைவுகளின் மீட்டல், வயலும் வாழ்வும், டிஜிற்றலின் வருகையால் தொழில் இழந்த ஓவியர்கள், தொலைக்காட்சியின் வருகை ஏற்படுத்திய சலசலப்பு, சூத்திரக் கிணறும் விவசாயமும், மாறிப்போன உபசரிப்பு முறைகள், நிகழ்வுகளை மீட்டுப்பார்க்க உதவும் புகைப்படங்கள், ஊரடங்கு வாழ்க்கை, சேர்க்கஸ், உடற்பயிற்சி கால நினைவுகள், போர்க்காலமும் வியாபாரமும், வல்வெட்டித்துறையும் இந்திரவிழாவும், மின்சாரம் இல்லாத கால நினைவுகள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.