வே.சதாசிவம்பிள்ளை (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: டாக்டர் ச.மஹோற்கடன், மூளாய் வீதி, வட்டுக்கோட்டை, 2வது பதிப்பு, 1965, 1வது பதிப்பு, 1884. (திருக்கோணமலை: கோணேஸ்வரா அச்சகம்).
46 பக்கம், விலை: 50 சதம், அளவு: 22×14.5 சமீ.
யாழ்ப்பாண வைபவம் என்னும் இந்தச் சிறு சரித்திரம் யாழ்ப்பாணம் தென் கோவையிலிருந்த (கோப்பாய் தெற்கு) கதிரேச முதலியார் கனகசபை என்பவர் கேட்டுக்கொண்ட படி, யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை வே.சதாசிவம்பிள்ளை அவர்களால் பரிசோதிக்கப்பெற்று 1884இல் சென்னை ஸ்கொட்டிஷ் பிரஸிஸில் முதலில் பிரசுரிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற் சம்பவித்தவைகளைக் கூறுவதால் யாழ்ப்பாண வைபவம் என்று பெயரிடப்பட்டதாக மூல ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இதன் மூலப்பிரதி, திருக்கோணமலையிலுள்ள அகிலேசபிள்ளை அழகைக்கோன் என்பவரிடமிருந்து பெறப்பட்டதாகக் குறிப்புள்ளது.