15993 வரலாறு தரும் மட்டக்களப்பு.

எஸ்.ஏ.ஐ.மத்தியூ. மட்டக்களப்பு: அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ, கல்முனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (மருதமுனை: ஜெஸா கிறபிக்ஸ், அல்-மனார் வீதி).

xx, 80 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 350.00, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-51256-4-2.

வரலாறு தரும் மட்டக்களப்பு, இலங்கையில் ஆதித் தமிழ் ஆட்சிகள், ஈழத்தின் ஆதிக் குடிகள் திராவிடர்களே, கோவிந்தன் வீதி-மட்டக்களப்பு, மட்டக்களப்புக் கல்வி வளர்ச்சிக்கு மத நிறுவனங்களின் பங்களிப்பு, புனித மரியாள் இணைப் பேராலயம் மட்டக்களப்பு, கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல், கிழக்கு மாகாணத்தில் கிறிஸ்தவ இலக்கிய மீளாய்வு, மட்டக்களப்பு மாநில புராதன சைவத் திருத்தலங்களின் சிறப்பும் மகிமையும் என இன்னோரன்ன கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியூ, ஆன்மீகப் பணியுடன் கல்விப்பணியையும், சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருபவர். இன, மத, மொழி பேதமற்ற மனிதநேயம் மிக்க ஒருவர். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4132). 

மேலும் பார்க்க:

சம்மாந்துறை பெயர் வரலாறு. 15285

கற்குடா முஸ்லீம்கள்: ஓர் பூர்வீக வரலாற்றுக் குறிப்பு. 15977

ஏனைய பதிவுகள்