கே.ரி.கணேசலிங்கம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
x, 214 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 660., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-685-052-9.
இந்நூலில் 11 தலைப்புக்களுடன் வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த அம்சங்கள் பின்னிணைப்பாகவும் தரப்பட்டுள்ளது. அனைத்து தலைப்புகளும் இஸ்ரேலின் அரசியல் வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இந்நூலின் ‘யூத இனத்தின் அரசியல் வரலாறு’, இஸ்ரேலின் அரசியல் கட்டமைப்பு’ ஆகிய ஆரம்பப் பகுதிகள் யூதர்களின் புராதன வரலாற்றினை விளங்கிக்கொள்ளும் விதத்திலும் அதன் மீதான பற்றுதல்கள், எப்படி யூதர்களை தேசம் நோக்கிய நியமங்களுக்கு நகர்த்தியது என்றஅனுபவம் பகிரப்படுகின்றது. நூலின் ஏனைய பகுதிகள் யூத தலைமைத்துவத்தின் ஆளுமைகளை சார்ந்ததாக அமைகின்றன. இவை டேவிட் பென்சூரியன், கோல்டா மேயர், மோசே டயனின், ஏரியல் ஷரோனின், தியோடர் ஹெஸல், ஜிஞ்ஜாக் ராபின் ஆகிய அத்தியாயங்களில் விபரிக்கப்பட்டுள்ளன. நூலின் இறுதிப்பகுதிகளில் 1948ஆம் ஆண்டு யுத்தம், 1956ஆம் ஆண்டு யுத்தம், 1967ஆம் ஆண்டு யுத்தம் என்பன தனித்தனி அத்தியாயங்களில் விபரிக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவராகப் பணியாற்றுகின்றார்.
மேலும் பார்க்க: களவாடப்பட்ட பூமியின் கதை: பலஸ்தீன பயண அனுபவங்கள். 15879