எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி. சென்னை 600 014: மருதா வெளியீட்டகம், 226 (188), பாரதி சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (சென்னை 14: ஸ்ரீ மகேந்திரா கிராப்பிக்ஸ்).
264 பக்கம், விலை: சிங்கை டொலர் 18.00, அளவு: 21×13.5 சமீ., ISBN: 981-05-3203.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகில் சதாசிவப் பண்டிதர் பெறுமிடம், சிங்கப்பூரில் தமிழ்க் குடியேறிகள் படைத்த நான்கு பயண நூல்கள்- ஓர் ஆய்வு, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்-ஒரு கண்ணோட்டம், எண்பதுகளுக்குப் பின் சிங்கப்பூர்ப் புனைகதைகள், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில் தமிழ்ச் சமூகப் பிரதிபலிப்பு, சிங்கப்பூர்ப் படைப்பிலக்கியத் துறையில் பெண்களின் பங்களிப்பு, சிங்கப்பூர் சிறுவர் இலக்கியம்-ஒரு சிந்தனை, தமிழ் நாடக நூல்கள்- ஓர் ஆய்வு, பன்முகம் காட்டும் பயண நூல்கள், விருது பெற்ற வித்தகர்கள், இராம கண்ணபிரானின் ஐந்து நூல்கள்-ஒரு பார்வை, சிங்கப்பூரில் நற்றமிழ் வளர்த்த நகரத்தார் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 12 இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி, மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையிலும், தேசிய கல்விக் கழகம்-சிங்கப்பூரிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் நடத்தப்பட்ட தமிழிலக்கிய மாநாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்றுப் பல கட்டுரைகளை வாசித்துள்ளார். இவர் எழுத்தாளராக, பதிப்பாசிரியராக, மலேசியா, சிங்கப்பூரின் தமிழ் மொழி, தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறார்.