காக்கநாடன் (மலையாள மூலம்), நிர்மால்யா (தமிழாக்கம்). புது தில்லி 110001: சாகித்திய அகாதெமி, இரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, 1வது பதிப்பு 2010. (சென்னை: ஸ்ரீராம் பிரிண்டிங் பிரஸ்).
(6), 7-160 பக்கம், விலை: இந்திய ரூபா 85.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-260-2630-2.
சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற மலையாளச் சிறுகதைத் தொகுப்பு. யாழ்ப்பாணப் புகையிலை, மிச்சம், வெளிச்சத்தின் பாதை, கண்ணனின் தாயார், இனிப்புப் பதார்த்தம், கர்னலும் நண்பனும், முடிவில் ஒரு பயணம், யுத்தத்தின் இலாகா, மாற்றங்களின் பனிக்காலம், சித்தார்த்தனின் கோடாரி, பாண்டு ரங்கனுக்காக ஒரு முன்னுரை, ராணி- என் அன்பே வா, ஞாயிற்றுக் கிழமை, சிவந்த பிற்பகல் நிலவு, அன்னா அக்விலா பிரிஸ்கா ஆகிய 15 மலையாளச் சிறுகதைகளின் தொகுப்பு. இதில் முதலாவது கதையும் தலைப்புக் கதையுமான யாழ்ப்பாணப் புகையிலை, யாழ்ப்பாணத்தில் புகையிலை வியாபாரமும் சுருட்டுக் கைத்தொழிலும் செழித்துவளர்ந்த ஒரு காலனித்துவ காலத்தின் யாழ்ப்பாணத்துப் புகையிலை விவசாயிகளின் பகைப்புலத்தில் எழுந்தது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு இளைஞன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவன். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டும் கேரளா திரும்புகின்றான். அவன் எவ்வாறு யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டான் என்ற பூர்வீகம் எமக்கு மலையாளப் புகையிலை வியாபாரிகளுக்கும், யாழ்ப்பாணத்துப் புகையிலைச் செய்கையாளர்களுக்கும் இடையில் இருந்த மிக முக்கியமான வரலாற்றுப் பாரம்பரியத் தொடர்பினைப் பேசுகின்றது.