கோ.இளவழகன் (தொகுப்பாசிரியர்). தஞ்சாவூர்: கதிர்மதி பதிப்பகம், 9, காவல்காரத் தெரு, உரத்தநாடு-614625, 1வது பதிப்பு, 2012. (தஞ்சாவூர்: K.B. பிரின்டர்ஸ்).
xviii, 470 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 400., அளவு: 22×14 சமீ.
முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா நினைவாக இந்நூல் வெளிவருகின்றது. இதிலுள்ள ஆக்கங்கள் விடுதலைப் புலிகள், உயிராயுதம் போன்ற போராட்ட இதழ்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிர்க்கொடையாளர்களான கரும்புலி மாவீரர்களின் வீரம்செறிந்த தாக்குதல்களின் உணர்வுபூர்வமான விபரத் தொகுப்பு இது. 05.07.1993அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்துவைத்து தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் விடுத்த அறிக்கை முதலில் இடம்பெற்றுள்ளது.