ஆ.சதாசிவம் (மூலம்), திருஞானேஸ்வரி சதாசிவம் (பதிப்பாசிரியர்). ஐக்கிய அமெரிக்கா: சதாசிவம் பதிப்பகம், பேதெஸ்டா, மேரிலாண்ட், 2வது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 1963. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
x, (2), 69 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 14.5 சமீ.
இந்நூல் தமிழில் ஆராய்ச்சித்துறையில் ஈடுபடுவோர்க்குப் பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுபவர்கள் இக்காலத்திற் கவனிக்க வேண்டிய முக்கியமான முறைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் முதலிய மேற்றிசை மொழிகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல துறைகளில் வெளிவருகின்றன. அவற்றில் கையாளப்படும் முறைகள் படிப்பவர்களுக்குத் தெளிவை உண்டாக்கத்தக்கன. அவற்றைத் தமிழுக்கு இயைந்தவாறு பொருத்தி அமைத்து இந்நூல் விளக்குகின்றது. தமிழிலக்கண நூல்களில் தொல்லாசிரியர்கள் காட்டிய உத்தி வகைகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன. இவ்வுத்திகள் எக்காலத்திலும் நூலாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியன என்பதையும் இந்நூல் வலியுறுத்துகின்றது. இந்நூல் ஆராய்ச்சிக் கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரையின் அமைப்பு, மேற்கோள், அடிக்குறிப்பு, மேற்கோள் நூற்பட்டியல், உத்திகள், மொழிநடை ஆகியவற்றுடன் மேற்கோள் நூற்பட்டியல், பிற்சேர்க்கை என பல்வேறு பாடத் தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.