கமுதர் (இயற்பெயர்: க.மு.தர்மராசா). கொழும்பு 6: தமிழ்ச் சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2008. (கொழும்பு: யுனைட்டெட் பிரின்ட் அச்சகம்).
93 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21.5 சமீ.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 2008ஆம் ஆண்டு பங்குனி மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற புதிய உசாத்துணை நூலகப் (சட்டப் பிரிவும் உட்பட) பிரிவின் திறப்பு விழாவின் நிகழ்ச்சித் தொகுப்பு. க.மு.தர்மராசா அவர்கள் இந்நிகழ்வினைத் தொகுத்து புகைப்படங்களின் உதவியுடன் பதிவுசெய்துள்ளார். இந்நிகழ்வில் ஆற்றப்பட்ட பேரறிஞர்களின் உரைகளின் சாராம்சங்களையும், இந்நிகழ்வு தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த ஆக்கங்கள், செய்திகள், அறிக்கைகள் ஆகியவற்றையும் பதிவுசெய்துள்ளார்.