கோமதி முருகதாஸ். யாழ்ப்பாணம்: நூலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: மிக்கி பிரின்டிங் ஸ்பெஷலிஸ்ட், தபாற்பெட்டிச் சந்தி, பலாலி வீதி, திருநெல்வேலி).
(9), 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-6150-09-9.
சுட்டியாக்கத்திற்கு ஒரு அறிமுகம், பாடச் சுட்டிகள் (Subject Indexing) தயாரித்தல், சுட்டியாக்க மொழி (Indexing Language), சுட்டியாக்க அமைப்பு (Indexing system), தலைப்புச் சொற்களின் சுட்டியாக்கம் (Title Word indexing), மூலச் சுட்டியாக்கம் (Keyword Indexing), மேற்கோள் சுட்டியாக்கம் (Citation Indexing), சுட்டிகளை மதிப்பீடு செய்யும் அளவீடுகள் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் நூலகவியல்துறை மாணவர்களின் பாடத் தேவைகளுக்கேற்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. கோமதி முருகதாஸ், பேராதனைப் பல்கலைக்கழக விவசாயத்துறைப் பட்டதாரி. இவர் 1997ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராக இணைந்து தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட உதவி நூலகராக பணயாற்றுகின்றார்.