ச.சண்முகதாசன். வவுனியா: ச.சண்முகதாசன், சிரேஷ்ட உதவி நூலகர், வவுனியா வளாகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி).
x, 129 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-5786-05-3.
இந்நூலில் பொது முகாமைத்துவம் பற்றிய சுருக்கமான விளக்கத்துடன் நூலகங்கள் பற்றியும், நூலகமொன்றில் செயற்படுத்தப்படக் கூடிய முகாமைத்துவ செயற்பாடுகள் என்பன பற்றியும் தனித்தனிப் பகுதிகளாக விபரிக்கப்பட்டுள்ளன. நூலக முகாமைத்துவத்திற்கோர் அறிமுகம், முகாமைத்துவம்: ஓர் அறிமுகம், நூலகங்கள், நூலக முகாமைத்துவ செயற்பாடுகள், அலுவலக முகாமைத்துவம், வள முகாமைத்துவம், அறிவு முகாமைத்துவம், முரண்பாட்டு முகாமைத்துவம், அனர்த்த முகாமைத்துவம், நிதி முகாமைத்துவம், தொடர்பாடல், நிகழ்வு முகாமைத்துவம் ஆகிய பன்னிரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. திரு. சண்முகரெத்தினம் சண்முகதாசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணக்கிலும் நிதியியலும் இளமாணி, மற்றும் கலைத்துறையில் இளமாணிப் பட்டங்களைப் பெற்றவர். ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நூலக மற்றும் தகவல் விஞ்ஞானத்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவராவார். நூலகவியல் துறையில் 20 வருடங்களுக்கு மேற்பட்ட சேவை அனுபவத்தைக் கொண்ட இவர் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சிரேஷ்ட உதவி நூலகராகப் பணியாற்றுகிறார்.