16010 நூலகப் பகுப்பாக்கத் திட்டங்களும் எண்கட்டுமானப் படிமுறைகளும்.

கல்பனா சந்திரசேகர், தயாநந்தி ஸ்ரீதரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், லூட்டன், 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

x, 254 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 950., அளவு: 22×14.5 சமீ., 978-624-6164-04-1.

நூலகங்களில் தகவல் சாதனங்களை ஒழுங்குமுறையில் பேணி, வாசகர்களின் தேவையறிந்து பொருத்தமான ஆவணங்களை உரிய நேரத்தில் வழங்கும் சேவைக்கு அடிப்படையாக அமையும் செயற்பாடுகளுள் பகுப்பாக்கமும் ஒன்றாகும். மேலும், நூலகப் பகுப்பாக்க செயற்பாட்டில் காத்திரமானதொரு பணியாக எண் கட்டுமானம் காணப்படுகிறது. பகுப்பாக்கம், எண் கட்டுமானம் என்பவை தொடர்பில் சகலரும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் பல விளக்கங்களுடன் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் அத்தியாயங்கள், தகவலும் தகவல் ஒழுங்கமைப்பும், நூலகப் பகுப்பாக்கத்தின் அடிப்படைகள், தூயி தசாம்சப் பகுப்பாக்கத் திட்டம், அனைத்துலகத் தசாம்ச பகுப்பாக்கத் திட்டம், கோலன் பகுப்பாக்கத் திட்டம், ஏனைய நூலகப் பகுப்பாக்கத் திட்டங்கள், இணையவழி நூலகப் பகுப்பாக்கத் திட்டங்கள், விடயச் சுட்டி ஆக்கமும் சங்கிலிச் சுட்டியாக்கமும், சிறுவர் நூல்களுக்கான பகுப்பாக்கமும் ஒழுங்கமைத்தலும் ஆகிய தலைப்புகளின் கீழ் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்