16011 நூலகப் பட்டியலாக்கம்: மரபும் மாற்றமும்.

மைதிலி விசாகரூபன். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 44/5, மணல்தரை ஒழுங்கை, கந்தர்மடம், 1வது பதிப்பு, சித்திரை 2020. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

x, 180 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14.5., ISBN: 978-955-53349-1-4.

நூலகப் பட்டியலாக்கத்தின் அடிப்படைகள்-1, நூல் விவரணம், பட்டியல் தலையங்கத் தெரிவு, தொடர் வெளியீடுகளின் பட்டியலாக்கம், பட்டியல் பதிவுகளை ஒழுங்கமைத்தல், பட்டியலாக்க மரபு மாற்றம் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் ஐந்து இயல்களும் மரபு வழியான பட்டியலாக்கத்தின் அவசியமான பகுதிகளை விரிவாக விளக்கியுள்ளன. நூலகவியலைத் தமது துறையாக வரித்துக் கொள்கின்ற ஒவ்வொருவரும் கழித்தொதுக்க முடியாத அங்கமாகவுள்ள ‘பட்டியலாக்கம்” சார்ந்த ஒரு தெளிவான பார்வையைத் தமிழில் தரும் வகையில் இவ்வியல்கள் அமைந்துள்ளன. மரபு நிலையான பட்டியலாக்கத்திலிருந்து மாற்றம் கொண்டுள்ள சில அடிப்படையான கூறுகளை ஆறாவது இயல் விளக்குகின்றது. தற்போது பட்டியலாக்கத்தில் பயன்படுகின்ற புதிய நியமங்கள் சில அறிமுகஞ் செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் இன்றைய பட்டியலாளரும், நூலகவியல் மாணவரும் தெளிவைப் பெற்றுக்கொள்ள இந்நூல் உதவியளிப்பதாயுள்ளது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராவார். 1992இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்பாகப் பயின்று இலங்கை நூலகச் சங்கத்தினால் நடத்தப்படும் நூலகவியல் டிப்ளோமாவை 1994இல் நிறைவு செய்தவர். நூலகத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றல் மற்றும் கற்பித்தல் அனுபவம் கொண்டவர். நூலகமும் சமூகமும் (2004), இலங்கையில் நூலகச் சட்டங்கள் (2005), நூலக முகாமைத்துவ நுட்பங்கள் (2011) ஆகிய நூல்களையும் பல நூலகவியல்சார் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Crown Of Egypt Tragamonedas Sin cargo

Content ¿qué Ventajas Guarda Jugar Regalado A Los Tragamonedas Online? | Juegos de tragamonedas retro reels Acerca de cómo Depositar O bien Jubilar Recursos Las