தி.செல்வமனோகரன். யாழ்ப்பாணம்: நூலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).
(4), 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் அவர்களின் மூன்றாம் ஆண்டு ஞாபகார்த்த நினைவுப் பேருரை 27.12.2022 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றவேளை வெளியிடப்பட்ட பிரசுரம் இதுவாகும். தி.செல்வமனோகரன், யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்து மெய்யியல் பட்டதாரியாவார். அத்துறையில் தனது முது தத்துவமாணிப் பட்டத்தையும் நிறைவுசெய்துள்ளார். இப்பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீட, சைவசித்தாந்தத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமைபுரிந்து வருகின்றார். நூல்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஏடுகள், புழங்கு பொருட்கள் போன்றவற்றின் சேகரத்திலும் அதிக ஈடுபாடு காட்டிவருகின்றார். ஆவணமாக்கல் செயற்பாட்டாளராக பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.