16014 கலங்கரை-2020.

கவிதாமலர் சுதேஸ்வரன் (இதழாசிரியர்). சுன்னாகம்: சிவன் சிறுவர் கழகம், 1வது பதிப்பு, 2020. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரிண்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி).

24 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 270., அளவு: 21×14.5 சமீ.

15.02.2019 அன்று ஆரம்பிக்கப்பட்ட சுன்னாகம் சிவன் சிறுவர் கழகத்தின் ஆண்டு இதழ் இதுவாகும். தமது திறமைகளைப் பற்றி அறிந்துகொள்ளாது படிப்புச் சுமையுடன் மட்டும் வாழும் இன்றைய இளந்தலைமுறையினரை ஒன்றிணைத்து அவர்களின் ஆளுமையை மேலும் விருத்திசெய்து அவர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் அவர்களது படைப்பாக்கங்களைத் தொகுத்து இவ்விதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழின் சிறப்பம்சமாக சுன்னாகம் பிரதேசத்தில் தமது சேவைகளால் மக்களின் மனம் கவர்ந்த சில அலுவலர்களையும், சமூக சேவகர்களையும் சிறு கட்டுரைகளின் வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். சிவன் சிறுவர் கழக செய்திப் படங்களும், அங்கத்தவர்களினதும், பரிசகளை வென்றோரினதும், கட்டுரையாளர்களினதும் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

ll Tragamonedas Fruit Mania

Content Cool buck Slot de video | Reseña sobre slot ¿Adonde deseas coger hacen de Bonos? Slots.lat 🇨🇱 Argentina Recibe Bonos con el fin de