16015 கலங்கரை-2021.

கவிதாமலர் சுதேஸ்வரன் (இதழாசிரியர்). சுன்னாகம்: சிவன் சிறுவர் கழகம், 1வது பதிப்பு, 2021. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரிண்டர்ஸ், டாக்டர் சுப்பிரமணியம் வீதி).

62 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ.

15.02.2019 அன்று ஆரம்பிக்கப்பட்ட சுன்னாகம் சிவன் சிறுவர் கழகத்தின் நோக்கம் ஆன்மீகம், ஒழுக்கம், மூத்தோரைக் கனம் பண்ணுதல், நேரத்தை கடைப்பிடித்தல், பிறரிடம் நல்ல விடயங்களைக் காணும் இடத்துத் தட்டிக் கொடுத்தல், கடவுளுக்கும் ஆபத்தில் கைகொடுப்போருக்கும் தயங்காமல் நன்றி தெரிவித்தல், தேவையான நேரத்தில் யாருக்கும் உதவிசெய்தல் ஆகிய நற்பண்புகளை சிறுவர்களிடத்தே வளர்த்தெடுத்தலாகும். அதனை செயற்படுத்தும் ஒரு வழிமுறையாக கலங்கரை ஆண்டிதழ் சிறுவர்களின் ஆக்கங்களுடன் வெளிவருகின்றது. இவ்விதழின் மற்றொரு அம்சமாக சுன்னாகம் பிரதேசத்தில் தமது சேவைகளால் மக்களின் மனம் கவர்ந்த சில அரச அலுவலர்களையும், சமூக சேவகர்களையும் சிறு கட்டுரைகளின் வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். சிவன் சிறுவர் கழக செய்திப் படங்களும், அங்கத்தவர்களினதும், பரிசுகளை வென்றோரினதும், கட்டுரையாளர்களினதும் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்