16020 அளவை அலம்-3: தேசிய வாசிப்பு மாத சிறப்பு மலர் 2022.

தனேஸ்வரி போல் சுரேஸ் (மலர்க் குழு). அளவெட்டி: பொது நூலகம், வலி வடக்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (யாழ்ப்பாணம்: துர்க்கா மல்ட்டி சென்டர், மல்லாகம் சந்தி, மல்லாகம்).

vi, 52 பக்கம், ஒளிப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×17.5 சமீ., ISSN: 2659-2134.

2022 தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அளவெட்டி பொது நூலகத்தினரால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இம்மலர்க் குழுவில் பொது நூலக நூலகர் திருமதி தனேஸ்வரி போல் சுரேஸ், வாசகர் வட்டம், ஆலோசனை சபை, மற்றும் நூலக உத்தியோகத்தர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னுரை, ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகிய சிறப்பு மலர்களுக்குரிய வழமையான அம்சங்களுடன் அளவையின் ஆலயங்கள்: அழகொல்லை முத்து விநாயகர் கோவில் தல வரலாறு (ச.சஜீலன்), அளவையின் ஆலயங்கள்: அளவெட்டி புனித சூசையப்பர் ஆலய வரலாறு (பி.எவ்.நவரட்ணம்), அளவெட்டி பொது நூலகத்தின் தாபகர் (வல்லிபுரம் பொன்னம்பலம்), அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு (ம.தசிதரன்), அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் மூலிகைகள் (மாதங்கி கௌரீசன்), போதையினை ஒழித்து எமது எதிர்கால சந்ததியினைக் காப்போம் (சரளா மதியழகன்), அளவையில் வாழ்ந்த சிரஞ்சீவி அலுக்கையில் ஒரு சஞ்சீவி (கே.எஸ்.சிவஞானராஜா), நேர்காணல்- பாரம்பரிய வேளாண் வித்தகர் முத்தையா சேனாதிராசா (நேர்கண்டவர்-வ.நல்லதம்பி), இலக்கியா-சிறுகதை (மு.பகீரதன்), வாசிப்பு மாதம் (மா.தணிகாசலபதி), மல்லாகம்-அளவெட்டியின் படைப்புலகம்: ஒரு தேர்ந்த ஆய்வடங்கல் (க.சௌந்தரராஜ சர்மா) ஆகிய ஆக்கங்களும், மாணவர்களினதும், வாசகர்களினதும் பல்வேறு படைப்பாக்கங்களும் இம்மலரில் இடம் பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

100 percent free Spins No

Articles Deposit ten And also have fifty The most famous Totally free Revolves Slots Enjoy Slots Online Greatest No deposit Incentives For those who’d rather