16022 தெல்லித் தென்றல்-2: தேசிய வாசிப்பு மாதம் சிறப்பு மலர்.

இ.விஜயலட்சுமி (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: பொது நூலகம், வலிகாமம் வடக்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: Zonal Printers கலட்டிச் சந்தி).

x, 108+10+14 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

தெல்லிப்பழை பொது நூலகத்தின் வெளியீடாக, தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி வெளிவந்துள்ள இரண்டாவது சிறப்பு மலர் (2019) இதுவாகும். ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன் பிரதேச எழுத்தாளர்களான கோகிலா மகேந்திரன், சைவப்புலவர் சு.செல்லத்துரை ஆகியோரின் வாசிப்பு தொடர்பான ஆக்கங்கள் இரண்டும், நூலகம் சார்ந்த ஆக்கங்கள் ஒன்பதும், சமயக் கட்டுரை ஒன்றும் தேசிய வாசிப்பு மாதப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் ஆக்கங்கள் இரண்டும், கலைஞர்களும் கலைகளும் என்ற தலைப்பில் தெல்லிப்பழைக் கிராமக் கலைஞர்களும் கலைகளும் பற்றிய கட்டுரையும், அறிஞர்களும் ஆளுமைகளும் என்ற பிரிவில் பார்வதிநாதசிவம், பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஆகியோர் பற்றிய மனப்பதிவுகளும், தெல்லிப்பழை பிரதேச சைவாலயங்கள் பற்றிய தொகுப்பும், மாவையழகனின் தேரழகு, புத்தகத்தின் பயனறிந்து நித்தம் பேணுவோம் ஆகிய இரு கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்